பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் - காவல்துறை

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (11:21 IST)
பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் dcpccbi@gmail.com-ல் புகாரளிக்கலாம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இருந்த நிலையில் தர்மபுரியில் போலீசார் அவனை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் கொண்டுவரப்பட்டார்.  
 
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்குப்பின் நாளை மாலை மதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதனிடையே, பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் dcpccbi@gmail.com-ல் புகாரளிக்கலாம் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏமாந்தது ரூ.5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்