ஒரே இணைப்பில் டிவி, இண்டர்நெட், போன் இணைப்புகள்: அசத்தல் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (07:56 IST)
ஒரே இணைப்பில் டிவி, இண்டர்நெட், போன் இணைப்புகள்: அசத்தல் அறிவிப்பு!
ஒரே இணைப்பில் டிவி, இன்டர்நெட் மற்றும் போன் இணைப்புகள் வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
மத்திய அரசு பாரத்நெட் என்ற திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணாடி இழை கம்பி வடம் கொண்ட இந்த திட்டத்தின்படி ஒரே இணைப்பில் டிவி, இன்டர்நெட் போன் ஆகியவை பயன்படுத்தலாம்
 
இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் மத்திய அரசு மிகப்பெரிய நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் இந்த நிதியின் மூலம் விரைவில் ஒரே இணைப்பில் டிவி, இன்டர்நெட் மற்றும் போன் சேவை வழங்கும் சேவை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை அதிவேக இன்டர்நெட்டை பயன்படுத்தப்படும் என்றும் இதனால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு பெருகும் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்