காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.! முதல்வர் தலை குனிய வேண்டும்.! விளாசிய இபிஎஸ்..!!

Senthil Velan
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:46 IST)
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வசித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையம் மீது மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். "இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த விடியா திமுக ஆட்சியில் ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

மக்கள் பாதுகாப்பு வேண்டி செல்லும் காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பற்ற நிலையிருக்கிறது  என்றும் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியதால், தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள்  வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறது  என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ: வாங்கிய கடனுக்காக மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய்.! சென்னையில் பயங்கரம்..!!
 
சட்டம் ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்