சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (07:15 IST)
சென்னையில் கடந்த 107 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த வகையில் 108-வது நாளான இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்து உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்