சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (18:00 IST)
கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட சிலைகள் கடலில் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன
 
அந்த வகையில் சென்னையில் சுமார் 2500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னையில் பட்டினப்பாக்கம் காசிமேடு பாலவாக்கம் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல் நிலையங்களில் அனுமதிபெற்ற 2500 விநாயகர் சிலைகள் இந்த நான்கு கடற்கரைகளில் கரைக்கப்பட்டது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் மாமல்லபுரம் சதுரங்கப்பட்டினம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்