நாளை திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி- தமிழக அரசு

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (16:57 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கான  நாளை  திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்க  மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு  அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்    நாளை ( ஜனவரி-9)  தமிழகத்தில் முழு ஊரடங்கான  நாளை  திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருமண அழைப்பிதழ் பத்திரிக்கையை காண்பித்து மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும்  திருமணம் உள்ளிட்ட விழாவிற்குச் செல்லும் மக்களுக்கு காவல்துறையினர் அனுமதி ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்