மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகை: ரஜினிக்கு பெரியார் திராவிட கழகம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (17:28 IST)
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட போவதாக பெரியார் திராவிட இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துக்ளக் பத்திரிக்கையின் 50வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் ராமசந்திர மூர்த்திக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் எடுத்து சென்றதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியார் மீது தவறான மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினிகாந்தை கைது செய்ய வேண்டும் என கோவை பெரியார் திராவிட கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் ரஜினி பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

இந்நிலையில் பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்காத பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கோவை பெரியார் திராவிட கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்