ரம்பூட்டான் பழமா? வேணவே வேணாம்! தெறித்து ஓடும் பயணிகள்! – வியாபாரிகள் வேதனை!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:06 IST)
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக ரம்பூட்டான் பழங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்தில் ரம்பூட்டான் பழங்களை வாங்க மக்கள் அச்சப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான ஆய்வில் வௌவால் கடித்த ரம்பூட்டான் பழத்தை சிறுவன் சாப்பிட்டதால் நிபா பரவியிருக்கலாம் என தெரிய வந்ததால் கேரளாவில் ரம்பூட்டான் பழங்களை சாப்பிட அம்மாநில சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட மலை சுற்றுலா தளங்களில் ரம்பூட்டான் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் ரம்பூட்டான் பழங்களுக்கு கேரள விதித்துள்ள தடையால் பீதியடைந்துள்ள சுற்றுலா பயணிகள் ரம்பூட்டான் பழங்களை வாங்க தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக சீசனில் கிலோ ரூ.250 விற்கும் ரம்பூட்டான் பழம் தற்போது கிலோ ரூ.100க்கு விற்றும் வாங்க ஆள் இல்லாமல் வீணாய் போவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்