ஆவின் பால் குறித்து வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்."- பால்வளத்துறை அமைச்சர்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (20:50 IST)
ஆவின் நிறுவனத்தில் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்திருந்த  நிலையில் ஆவின் பால் குறித்து வரும் அவதூறுகளை, வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்."என  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஊதா நிற பாக்கெட்டுகள், 3% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டுகள் மற்றும் 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் கொண்டிருக்கும்  ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கள் என 3 வகை பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த  நிலையில்,  ஆவின் பால் குறித்து வரும் அவதூறுகளை, வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்."என  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

"மக்களுக்கு தேவையான அளவு கொழுப்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று வெவ்வேறு வயதினருக்கும் ஏற்ற வகையில் ஊட்டச்சத்து அளவுகள் கொண்ட 3 வகையான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது;

எனவே ஆவின் பால் குறித்து வரும் அவதூறுகளை, வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்."என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்