போலீசார் வாகனம் தீ வைப்பு - தூத்துக்குடியில் மீண்டும் கலவரமா?

Webdunia
புதன், 23 மே 2018 (13:29 IST)
தூத்துக்குடியில் போலீசாரின் வாகனம் ஒன்று தீ வைக்கப்பட்டதால் அந்த பகுதில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இன்று 2 வது நாளாக தூத்துக்குடியில், போலீசாரின் வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தவர்களின் உடல்களை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி  பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே, அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்,  போலீசாரின் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
 
போலீசாரின் அடக்குமுறையின் மீது கோபம் கொண்ட பொதுமக்களில் சிலர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த வாகனம் முற்றிலும் தீயில் கரிகி நாசமாகியது. தூத்துக்குடியில் இரண்டாம் நாளாக பதட்டம் ஏற்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்