மெரீனாவில் இரவு நேரத்தில் அனுமதி இல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (17:52 IST)
கோடை வெயிலால் வெப்பத்தை தணிக்க மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை, இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாகவும், அதை தடுக்க வேண்டும் என கூறி சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இரவு நேரங்களில் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்தது.
 
மேலும் சென்னை மாநகர காவல் சட்டம் 41-ன் படி பொது இடங்களில் கூடுவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரம் உள்ளது என காவல்துறை தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் கோடை காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்