பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி கடலோர பகுதி காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது

J.Durai

வெள்ளி, 31 மே 2024 (11:22 IST)
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி அரசு விருந்தினர் விடுதிக்குள் சென்று.வெள்ளை நிறத்திலான வேஷ்டி மேல் துண்டுடன், கழுத்தில் கவி நிற துண்டுடன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் சென்றார்.
 
பிரதமரை கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் மேலாளர்,ஆனந்த் பிரதமர் மோடிக்கு தேவி பகவதி அம்மன் படத்தை பிரதமருக்கு கொடுத்து வரவேற்றார்.
 
குமரியம்மன் சன்னதிக்கு சென்ற பிரதமர்க்கு கோவில் மேல் சாந்தி மந்திரங்கள் செல்லி பிராத்தனை செய்த பூக்கள்,சந்தனம், விபூதி  உடன். அம்மனுக்கு சாத்திய மலர் மாலையை பிரதமருக்கு அணிவித்தார்.
 
பிரதமர் கோவிலில் தரிசனம் முடித்து நேராக, பூம்புகார் படகு துறையில் இருந்து தனிப்படகில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றவரை விவேகானந்தா கேந்திரம் தலைமை நிர்வாகி பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
 
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பாத மண்டபத்திற்கு சென்று வணங்கிய பின். சுவாமி விவேகானந்தர் சிலை மண்டபத்திற்குள் சென்று விவேகானந்தர் சிலையை வணங்கிய பின் மீண்டும் சென்ற வழியிலே படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கிய பிரதமர் தியானம் மண்டபத்திற்குள் சென்று வணங்கி நின்றவர். 
 
சில நொடிகளுக்கு பின் தரையில் அமர்ந்து தியானத்தை   தொடங்கினார்.
 
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 45 -மணி நேர தியானத்தை தொடங்கினார்.
 
தியானத்தின் போது நீராகாரம் மட்டுமே அருந்தும் பிரதமர் பயன் படுத்தும் நீர் ஆகாரம்.இளநீர், எலுமிச்சை சாறு, திராட்சை ஆகியவற்றை அருந்துகிறார்.
 
தியானம் பகுதியில் இரண்டு மத்திய சிறப்பு படை பணியாளர்கள் இருவர் 4-மணி நேரத்திற்கு இரண்டு பேர் மாற்றி,மாற்றி பணியில் ஈடுபடுவார்கள்
 
தியானம் நேரம் 45 -மணி நேரத்தை முடித்தபின் அவரது பயண திட்டம் பற்றிய தகவல் சொல்லப்பட உள்ளது
கடற் பரப்பில் கடலோர காவல்படை மை சேர்ந்த 4 பெரிய படகுகள் மட்டும் அல்லாது.கடலோர காவல் படையின் 15 சிறிய படகுகள் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி,சுற்றி வருகிறது.
 
கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரி பகுதி  காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறி.குமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சிறப்பு காவல்துறை,கடலோர காவல்படை , முப்படைகளின் கண் காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்