சசிகலாவின் பரோல் கோரிக்கை மனு நிராகரிப்பு...

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (19:16 IST)
தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாள் பரோல் கேட்டிருந்த சசிகலாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


 

 
கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைப்பாட்டில் அவதிப்படும் தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, 15 நாள் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார்.
 
4 நாட்கள் விடுமுறை அடுத்து, இன்று அவரின் மனு பரிசீலனைக்கு வந்தது. இந்நிலையில், சசிகலா பரோல் கோரிய மனுவில் தகுந்த ஆதாரங்கள் இல்லை மற்றும் சில தொழில் நுட்ப காரணங்களை காரணம் காட்டி அவரின் பரோல் மனுவை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம்  நிராகரித்துவிட்டது.
 
மேலும், கூடுதல் தகவல்களுடன் புதிய பரோல் மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மீண்டும் சசிகலா தனது பரோல் மனுவை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
 
இந்த விவகாரம் தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்