பெற்றோர்கள் கட்டி வைத்து சித்திரவதை: குடிக்க பணம் தராததால் மகன் ஆத்திரம்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (14:29 IST)
மது அருந்த பணம் தராத தாய் தந்தையின் கை கால்களை கட்டிப் போட்டு சித்தரவதை செய்த மகனை, பொதுமக்கள் காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.


 

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் வசித்து வருபவர் மணிகட்டி. இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியின் கடைசி மகன் கார்த்திக் ராஜா. இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரைச் சுற்றித் திரிந்துள்ளார்.

மேலும், குடிபோதைக்கு அடிமையானதால், எப்போதும் மது அருந்திய வண்ணம் இருந்துள்ளார். இதனால் மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகறாறு செய்வார். அவர்கள் அடித்து உதைத்து சித்திரவதையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் ராஜா, நேற்றும் குடிக்க பணம் கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அவர்களை கயிறால் கட்டிப்போட்டு சித்திரவைதை செய்துள்ளார். அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்ட கார்த்திக் ராஜா, கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர்களின் அலறலைக் கேட்டதும், அருகில் இருந்தவர்கள் வந்து கட்டப்பட்ட கை, கால்களை அவிழ்த்து அவர்களை மீட்டனர். மேலும், மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோரை அடிக்கடி சித்திரவதை செய்யும் கார்த்திக்ராஜாவை பிடித்து, காவல்துறை வசம் ஒப்படத்தனர்.
அடுத்த கட்டுரையில்