ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? ப.சிதம்பரம் கேள்வி

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (11:39 IST)
எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி, வேற்று மாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல அவகாசம் கூட கொடுக்காமல் திடீரென மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு பொதுமக்களை அடைக்க முடியும்? என்று தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது:
 
நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும். வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? என்று பதிவு செய்துள்ளார்.
 
ஆனால் ப.சிதம்பரம் அவர்களின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இப்போது சொந்த ஊருக்கு செல்வது முக்கியமா? கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவது முக்கியமா? என்ற கேள்வியை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்