நாளை ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படலாம்… புகழேந்தி ஆவேசம்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (08:45 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தலைமை மேல் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடந்த நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சார்பில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியைக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன் நீக்கம் குறித்து இந்து ஊடகத்திடம் பேசியுள்ள புகழேந்தி ‘நான் எதிலாவது சிக்கமாட்டேனா எனக் காத்திருந்தார்கள். அன்புமணி ராமதாஸின் மீதான என் விமர்சனத்தை சாக்காக வைத்து நீக்கிவிட்டார்கள். கட்சியில் நான் மட்டுமே ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்தேன். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அவரை தலைமை பதவியில் இருந்து நீக்க இப்போது காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார்கள். இன்று நான் நீக்கப்பட்டது போல நாளை அவரும் கட்சியில் இருந்து நீக்கப்படலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்