இந்நிலையில், சில நாட்களாகவே சசிகலா தன் ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இதுகுறித்த ஆடியோக்கள் வலம் வருகிறது. அதில், விரையில் அதிமுக கட்சியை வழிநடத்தப்போவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் சசிகலா கட்சி என்ன செய்தாலும் அதிமுக ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் நாடகமாடி வருவதாகவும் கூறியுள்ளனர்.