தமிழக எதிர்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தேர்வு! – அதிமுக அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (15:33 IST)
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவின் சார்பில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடந்த நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சார்பில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஓபிஎஸ்-க்கு பதவி ஏதும் வழங்கப்படாததால் கட்சியில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே உரசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும், பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி.அன்பழகன் உள்ளிட்டோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்