அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும், தினகரனை நீக்குவதிலும், அவர்கள் குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அதிமுகவை கொண்டு செல்வதிலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக இருவரும் நேற்று முன்தினம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, தனக்கு கிடைத்த தகவல் ஒன்றை ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியுடன் பகிர்ந்து ஆலோசனை செய்துள்ளார்.
தினகரன் அணியில் இருந்து பொதுக்குழுவுக்கு முன்னதாகவே எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச திட்டமிட்டுள்ளனர். அப்போது சசிகலாவை மட்டும் வேண்டுமானால் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, தினகரனை கட்சியில் அதே பொறுப்பில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு நாம சம்மதிச்ச மறுபடியும் புதுசா சிக்கல் வரும் என ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை அலர்ட் செய்துள்ளார். தான் அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டேன் எனவும் அங்குள்ள எம்எல்ஏக்களை இங்கு வர வைக்க முயற்சிகள் எடுத்து வருவதாகவும் எடப்பாடி ஓபிஎஸ்ஸிடம் கூறியுள்ளார். இருவரும் சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதில் உறுதியாக உள்ளனர்.