ஓபிஎஸ் வீட்டில் ‘கோ’ பூஜை, ஈபிஎஸ் வீட்டில் சிறப்பு யாகம்: என்ன நடக்கும் பொதுக்குழுவில்?

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (08:23 IST)
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதம் நடக்க கூடாது என்பதற்காக சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
இந்த நிலையில் ஒபிஎஸ் தரப்பினர் தங்களுக்கு சாதகமாக பொதுக்குழுவில் நடக்க வேண்டும் என அவரது வீட்டில் பசுவை வரவழைத்து கோ பூஜை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் சிறப்பு யாகம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தங்களது வீடுகளில் தனித்தனியே பூஜை செய்துள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்