கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா.

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (00:03 IST)
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா  நடைபெற்றது.
 
மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லசியுடன், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் ஆலோசனைப்படிகோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாகவும் பொதுமக்களின் தாகம் தீர்க்கவும்  கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகுதிரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு சின்ன சாமி அவர்களும் இணைந்து  கரூர் பேருந்து நிலையம் அருகில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து இளநீர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

உடன் மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் தனேஷ் (எ) முத்துக்குமார், ஒன்றிய செயாளர்கள்  கலையரசன், இளங்குமரன், தெற்கு நகர செயலாளர் விசிகே ஜெயராஜ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்