தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:40 IST)
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் ,வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழ் நாடு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.