ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்! – சாலைகளில் நெரிசல்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (11:08 IST)
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பகுதிகளான ஊட்டி, கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் கோடைக்கால சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதிகமான சுற்றுலா பயணிகள் பயணிப்பதால் கோடை மலை சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது, அதுபோல ஊட்டியிலும் தாவரவியல் பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா என சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது உள்ளூர் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்