ஜனவரி மாதம் வரை வெங்காய விலை குறையாது! – வியாபாரிகள் வியூகம்!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (10:43 IST)
தமிழகத்தில் வெங்காயம் விலை அதிகரித்துள்ள சூழலில் ஜனவரி வரை விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட இந்திய பகுதிகளில் கனமழை காரணமாக வெங்காய சாகுபடி பாதித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ள நிலையில் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் வெங்காயம் விலை குறைவது குறித்து பேசியுள்ள கோயம்பேடு வியாபாரிகள் வெங்காய வரத்து ஜனவரி மாதம் வரை இதே நிலையில் நீடிக்கும் என்பதால் விலையும் ஜனவரி வரை குறைய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்