நிதிப்பற்றாக்குறை எதிரொலி: அரசு ஊழியர் மடியில் கைவைத்த அரசு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (17:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு கடுமையான நிதி சிக்கலில் இருக்கும் நிலையில் தற்போது திடீரென அரசு ஊழியர்கள் மடியில் கை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவது உள்பட பல்வேறு செலவினங்கள் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
அதாவது 2002 மார்ச் 31-ஆம் தேதி வரை ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்