கொரோனாவுக்காக 11 கோடி நிதி திரட்டியுள்ள கோலி& அனுஷ்கா தம்பதியினர்!

வெள்ளி, 14 மே 2021 (16:35 IST)
நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கொரோனாவை எதிர்த்து போராட ரூ.2 கோடி நிதி வழங்கினர்.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,14,188 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,14,91,598 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,915 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,34,083 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கொரோனாவை எதிர்த்து போராட ரூ.2 கோடி நிதி வழங்கியுள்ளனர். மேலும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஒரு நிதி திரட்டும் முயற்சியையும் மேற்கொண்டனர். அதன் மூலம் இப்போது 11 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்