எலுமிச்சை விலை ஒரு கிலோ ரூ.200ஆக அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:00 IST)
கடந்த சில நாட்களாக எலுமிச்சை விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு கிலோ ரூபாய் ரூ.200ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கோடை வெயில் நேரத்தில் எலுமிச்சம் பழச்சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள தமிழக மக்கள், எலுமிச்சை விலை திடீர் உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் என்ற சந்தையில் தான் எலுமிச்சம் பழம் மிக அதிகமாக விற்பனையாகும். இந்த சந்தையில் இன்று ஒரு கிலோ ரூ.200ஆக விற்பனையாகி வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது
 
புன்னையாபுரம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், சங்கனாப்பேரி, அரியநாயகிபுரம், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி நடைபெற்று வரும் எலுமிச்சை விலை ஏற்றத்தால் எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்