கடையை மூட சொல்லியும், பின்பக்கம் வழியாக வியாபாரம்! – துணிக்கடைக்கு சீல்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (10:26 IST)
சென்னையில் கொரோனா காரணமாக துணிக்கடை ஒன்றை மூட உத்தரவிட்ட நிலையில் பின்பக்க வழியாக வியாபாரம் செய்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வந்த துணிக்கடை ஒன்றில் பணியாற்றிய 17 பேருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த கடையை மூடும்படி மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் முன்பக்கம் கடையை மூடிவிட்டு பின்வாசல் வழியாக துணிக்கடை ரகசிய வியாபாரம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த ராயபுரம் மண்டல உதவி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வெளியேற்றியதுடன் கடைக்கும் சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்