இந்தியாவில் கடந்தாண்டு கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா முதல் அலை குறைவது போலிருந்த நிலையில் கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக உருவெடுத்தது. தற்போது கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரொனா கால ஊரடங்கைவிட தற்போது ஒருசில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் பலர் தங்களில் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். பெரும்பாலான குடும்பங்களும், குழந்தைகளும், மாணவர்களும் பசியாலும் பட்டிணியாலும் வாடி வருகின்றனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஒரு கருத்துத் தெரிவித்துள்ளது.
அதில், கொரொனா நோய்த்தொற்று காரணமாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று தன்னார்வலர்கள் மூலமாக சத்துணவு வழங்கும் திட்டம் ஒன்று வகுக்கலாம் என தமிழக அரசிற்கு யோசனை கூறியுள்ளது.