ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28,234 வேட்பாளர்களில் 1,76,885 வாக்குகள் பதிவானது. அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது.
அந்நிலையில், சென்னை இராணி கல்லூரியில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. இதில், முதல் மற்றும் 2ம் சுற்று எண்ணிக்கை நிலவரப்படி டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 66 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், நோட்டோவிற்கு 122 வாக்குகள் கிடைத்துள்ளது.