புரட்டாசி முடிஞ்சிட்டுடோய்..! ஆடுகள் விற்பனை அமோகம்! – கொண்டாட்டத்தில் அசைவ பிரியர்கள்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (08:53 IST)
இன்றுடன் புரட்டாசி மாதம் முடியும் நிலையில் ஆடுகள் விற்பனை சந்தைகளில் களைகட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் புரட்டாசி மாத விரத நாட்களில் அசைவ உணவுகளான மீன், கோழி, ஆடு இவற்றின் விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசி மாத விரதம் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றுடன் புரட்டாசி மாதம் முடிவடைகிறது. இதனால் நாளை முதல் அசைவ உணவுகள் விற்பனை அதிகமாக இருக்கும்.

இதற்காக அசைவ உணவு கடைகள், மீன், கோழி, ஆடு கறி விற்பனையகங்கள் ஜரூராக தயாராகி வருகின்றன. இன்று தமிழகம் முழுவதும் ஆட்டு சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. நாளை மீன் மார்க்கெட்டுகளில் மீன் வரத்தை அதிகரிக்க மீன் விற்பனையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்