வரும் ஞாயிறு மெகா தடுப்பூசி முகாம் ரத்து!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (15:01 IST)
ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 வாரங்களாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்கள் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
ஆம், பண்டிகைக் காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்