தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புதன், 13 அக்டோபர் 2021 (12:43 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்டவற்றால் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பல பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழையும், விழுப்புரம், ராணிப்பேட்டை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்