சிக்னல் கோளாறு இல்லை! கழன்று கிடந்த நட்டு, போல்ட்! - கவரைப்பேட்டை ரயில் விபத்தில் திடீர் திருப்பம்?

Prasanth Karthick
வியாழன், 17 அக்டோபர் 2024 (13:00 IST)

கவரைப்பேட்டையில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளானது குறித்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் செல்லும் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெரம்பூர் தாண்டி சென்றுக் கொண்டிருந்தபோது, கவரைப்பேட்டை அருகே லூப் லைனில் சென்று சரக்கு ரயிலில் மோதி விபத்திற்குள்ளானது.

 

இந்த விபத்தில் 6 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கவரைப்பேட்டை ரயில்வே ஊழியர்கள், லோகோ பைலட் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

 

அதன்படி ஆஜரான ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் விபத்திற்கு காரணம் தொழில்நுட்ப குறைபாடு அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்தில் போல்டு, நட்டு கழன்று கிடந்ததால் நாசவேலை முயற்சியாக இருக்குமோ என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டு முறை சம்பவ இடத்தை ஆய்வு செய்திருந்தனர்.

 

இந்நிலையில் இது இரும்பு திருடர்களை கைங்கர்யமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதனால் இரும்பு திருடும் கும்பல், இரும்பை எடைக்கும் போடும் கடைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்