பணம் வராததால்...ATM- மெஷினை உடைந்த நபர்...வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (15:18 IST)
திண்டுகள் மாவட்டத்தில் ஏடிஎம்-ல் பணம் வராததால் ஒரு நபர் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகேயுள்ள வத்லகுண்டில் உள்ள ஒரு ஏடிஎம்-க்குள் நுழைந்த ஒருவர் பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால், அதிலிருந்து பணம் வராததால் ஆத்திரம் அடைந்து, அந்த ஏடிஎம் எந்திரத்தைக் காலால் எட்டி உதைத்து, உடைக்க முயன்றார். அதிலும் கோபம் தணியாத அவர் கிழே இருந்த கல்லை எடுத்து தூக்கி எந்திரத்தின் மீது போட்டு உடைத்தார்.
 
தற்போது, இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
 
இந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்