சசி, தினகரன் இல்லாத அதிமுக அணி: பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் ஓ.பி.எஸ்.

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (17:27 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்த பேச்சு வார்த்தைக்கு ஓ.பி.எஸ். பச்சைக்கொடி காட்டியுள்ளார்.


 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரு அணிகளாக உடைந்தது. இரு அணிகளும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
 
சசிகலா சிறைக்கு சென்ற பின் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தினகரன் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்துள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து இன்று தேர்தல் ஆணையத்தில் இரட்டை சின்னம் குறித்த விசாரணை நடைப்பெறுகிறது. இதையடுத்து ஓபிஎஸ்-யிடம் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் கூறியதாவது:-
 
இதுகுறித்து யாரும் தங்கள் அணியிடம் பேச அணுகவில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும், என்றார்.
அடுத்த கட்டுரையில்