ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் வாய்ப்பே இல்லை: ஆராய்ந்த அதிமுக அமைச்சர்!

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (09:09 IST)
திமுக செயல்தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய ஜாதகத்தை ஆராய்ந்ததில் அவர் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.


 
 
திருத்தங்கல்லில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால் 45 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக வந்திருந்தனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியாது.
 
ரகசிய வாக்கொடுப்பு நடத்தியிருந்தால் திமுக அத்தோடு காணாமல் போய் இருக்கும். பணம் கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் துடிக்கிறார். ஆனால் ஸ்டாலின் கனவு பலிக்காது. திமுக எம்எல்ஏக்கள் 89 பேரில் 50 பேர் அதிமுகவிற்கு வரத்தயாராக உள்ளனர்.
 
ஸ்டாலின் ஜாதகத்தில் அவர் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடையாது.  ஆட்சியில் குறை இருந்தால் சொல்லுங்கள்.  நாங்கள் திருத்திக் கொள்கிறோம். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்துக்கு திரும்பி வருவார்கள். மக்கள் எந்த சூழ்நிலையிலும் அதிமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.
 
அடுத்த கட்டுரையில்