ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடையாணை பெறுவது எப்படி?- தமிழருவி மணியன்

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (07:14 IST)
நெடுவாசல் பகுதி மக்களின் கொந்தளிக்கும் பிரச்சனையாக மாறிவிட்ட ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவதை விட இந்த திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற வேண்டும் என்றும், அந்த தடை பெறுவது எப்படி என்பது குறித்தும் சமூக ஆர்வலரும், காந்திய மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றின் மூலன் தெரிவித்துள்ளார்




இன்றைய சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, கிராமசபைகள் செயற்பட முடியாமல் உள்ளதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் தனித்தனியாகக் கூடி அத்திட்டத்தை எதிர்த்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் பின்னர் அந்த தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு முதலில் அனுப்பி வைப்பதோடு அதை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றால் நிச்சயம் இந்த திட்டத்திற்கு தடை பெற முடியும் என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

மேலும் தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் இதுபோன்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் அவர்கள் தங்கள் படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வுகள் முடிந்தவுடன் கோடை விடுமுறையில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி பூரண மதுவிலக்குப் போராட்டத்திலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபடலாம் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்