பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 5 ரூபாய் கேஷ்பேக் – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:30 IST)
பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக  மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா  புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். உதகை மாவட்டத்தில் 5 இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொறுத்தியுள்ள அவர் அதில் பாட்டில்களை இடுபவர்களுக்கு கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தில் ஒவ்வொரு பாட்டிலை இடும்போதும் பேடிஎம் பயனாளர்களுக்கு கிரெடிட் பாயிண்ட கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ 5 வீதம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொழில் நுட்ப வசதிகள் அந்த இயந்திரங் களில் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்