பேடிஎம் பயனாளர்கள் கேஒய்சி என்ற விபரங்களை அப்டேட் செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும் என்றும், அவ்வாறு அப்டேட் செய்யும்போது சில போலி செயலிகளை தரவிறக்கம் செய்யும் குறிப்புகள் வந்தால் அதனை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரியாமல் உங்கள் மொபைலில் போலி செயலிகளை பதிவிறக்கம் செய்தால் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் வங்கி கணக்குகள் மோசடியாளர்களின் கையில் சிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது
மோசடி செய்யும் ஹேக்கர்கள் இந்த போலி செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஹேக்கிங் செய்து பணத்தை திருடுவதாக செய்திகள் வந்துள்ளதாகவும், குறிப்பாக anydesk, Team Quer ஆகிய செயலிகளை பேடிஎம் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பேடிஎம் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது
போலி செயலிகள் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அவர்களது பணத்தை கொள்ளையடிக்கும் குற்றச்செயல் அதிகரித்து வருவதாகவும், இது குறித்து பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பேடிஎம் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது அது குறிப்பிடத்தக்கது