நியூஸ் பேப்பரில் உணவு பொருட்களை பார்சல் செய்ய தடை: தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (16:01 IST)
நியூஸ் பேப்பரில் உணவு பொருட்களை பார்சல் செய்ய தடை: தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு
நியூஸ் பேப்பரில் உணவு பொருள்களை பார்சல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் அச்சிட்ட காகிதங்களில் வடை பஜ்ஜி போன்ற உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
 
அச்சிட்ட நியூஸ் பேப்பரில்  உணவுப் பொருள்களை பார்சல் செய்யும் போது அந்த எழுத்துக்களில் உள்ள வேதிப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
காகிதங்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உணவு பொருட்களை பார்சல் செய்ய வாழை இலை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்