புதிதாக ரேசன் கடைகள்- அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (21:26 IST)
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் சுமார் 4000 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்வதற்காக அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கூட்டுறவுத் துறையின் கீழ் சுமார் 33,000 ரேசன் கடைகள் இயக்கி வருகிறது. இந்தக் கடைகளில் விற்பனையாளர் , எடையாளர் என மொத்தம் சுமார் 25  25,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் வாரியாகச் சுமார் 3,300 விற்பனையாளர்களும்,ம் 600 எடையாளர்களும் என மொத்தம் 4000 பேர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், சுமார் 200 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்