ரூ.300 ஆக உயர்ந்த மாத பிடித்தம்... புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:42 IST)
தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இன்று தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.
 
இந்நிலையில் மருத்துவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ” மக்கள் நலம் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #NationalDoctorsDay வாழ்த்துகள்! இது மக்களின் அரசு; மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும். நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
 
இதனோடு, அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
இன்று முதல் 2025 ஜூன் 30 ஆம் தேதி வரை 4 ஆண்டு காலத்துக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக ஊழியர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையும் ரூ.180 இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்