நடராஜன் காலமானார்: சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (05:32 IST)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சசிகலாவின் கணவர் நடராஜன் சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன,. இந்த நிலையில். நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நடராஜனின் உடல் காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்படும் என்றும் அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனனர்.

இந்தநிலையில் நடராஜன் காலமானதை அடுத்து சசிகலாவுக்கு உடனடியாக பரோல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில் சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்