அரசியலுக்கு வந்தால் ரஜினி வெற்றி பெறுவாரா? பாட்சா' நாயகி நக்மா பேட்டி

Webdunia
திங்கள், 8 மே 2017 (05:28 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று 'பாட்சா'. இந்த படத்தின் நாயகியும், தற்போது  அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலராக இருக்கும் நக்மா, நேற்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்தார்.



 


ரஜினியுடனான சந்திப்புக்கு பின்னர் நக்மா செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ரஜினியும், நானும் நீண்ட கால நண்பர்கள். திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளோம். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் சந்திப்பு இருந்தது. சாதாரண சந்திப்பு தான். அரசியல் கலப்பு எதுவும் இல்லை; அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசியலுக்கு, ரஜினி வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அரசியலுக்கு வந்தால், நிச்சயம் வெற்றி பெறுவார்; என்று கூறினார்/

ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான நக்மா, ரஜினியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்.
அடுத்த கட்டுரையில்