பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்திய விவகாரம்: ஆர்.டி.ஐ கூறிய அதிரடி பதில்

Webdunia
திங்கள், 8 மே 2017 (05:01 IST)
ஒரு நாட்டின் புகைப்படத்தை தனியார் நிறுவனம் ஒன்று பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் உள்ளன. பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் பிரதமரின் படத்தை அசால்ட்டாக பயன்படுத்தின.



 


இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, 'இரு நிறுவனங்களும் தங்களுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்டன' என மத்திய அரசு இந்த விவகாரத்தை முடித்து வைத்தது. ஆயினும் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பியபோது அங்கிருந்து வந்த பதில் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

ஆர்.டி.ஐ கூறிய பதில் இதுதான்: 'யாரால் பிரதமரின் புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவலை கூற முடியாது. அதைக் கண்டுபிடிக்க முழுமையான சோதனை நடத்தப்பட வேண்டும்.' இந்த பதில் அனைவரையும் அதிர வைத்துள்ளதால் இதுகுறித்த முறையான விசாரணை தேவை என அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்