டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களை காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, பலர் உயிரிழந்து நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது டெங்கு காய்ச்சல்.
இந்நிலையில், திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டெங்கு குறித்து நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசை கண்டிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை குறித்து முரசொலியில் செய்தி வெளியானது.