விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன அறநிலையத்துறை! – கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (10:51 IST)
நேற்று விநாயகர் சதுர்த்தி நடந்த நிலையில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட அறநிலையத்துறைக்கு திமுக எம்.பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாதது குறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

இதற்காக அறநிலையத்துறைக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தர்மபுரி எம்.பி செந்தில்குமார் “"இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல" - கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்” என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்