16 மாவட்டங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக வேலூரில் 112 டிகிரி

Webdunia
வியாழன், 2 மே 2019 (18:47 IST)
நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஃபனி புயல், காற்றில் உள்ள ஈரப்பதத்தை அடித்து கொண்டு சென்றுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அதிகபட்சமாக வேலூரில் 112 டிகிரி அளவுக்கு வெப்பம் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
 இன்று தமிழகத்தில் உள்ள 16 முக்கிய பகுதிகளில் வெயில் 100 டிரிகிக்கும் அதிகமாக இருந்தது. எந்தெந்த பகுதியில் எவ்வளவு டிகிரி வெப்பம் என்பதை தற்போது பார்ப்போம்
 
 சென்னை: 107 டிகிரி
 திருத்தணி: 111 டிகிரி
 மதுரை: 106 டிகிரி
 கடலூர்: 104 டிகிரி
 கரூர்: 104 டிகிரி
 நாகை: 104 டிகிரி
 தர்மபுரி: 101 டிகிரி
 நாமக்கல்: 100 டிகிரி
 திருச்சி: 102
 சேலம்: 106
 குடியாத்தம்: 104
 அரக்கோணம்: 109.4
 ஆம்பூர்: 104
 
கன்னியாகுமரி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் இந்த வெப்பத்தில் இருந்து தப்பித்துவிட்டன என்பதும் இந்த பகுதிகளில் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்