ரூ.6000 மட்டுமல்ல.. கூடுதல் நிவாரணம் வழங்கவும் திட்டம்.. தமிழக அரசு தீவிர ஆலோசனை..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (07:24 IST)
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பாக சென்னையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட உள்ளதாக நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்பதை பார்ப்போம்

இந்த நிலையில் ரூ.6000 மட்டுமின்றி  எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 5852 குடும்பங்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் சிபிசிஎல் நிறுவனத்திடம் இருந்து தொகையை பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 மட்டுமின்றி கூடுதலாக சில தொகை நிதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்